Thursday, December 28, 2006

சிங்கூர் பகுதியில் டாடா கார் தொழிற்சாலை அமைக்க, மேற்கு வங்க அரசு விவசாய நிலங்களை, அவர்களின் விருப்பமில்லாமல் வற்புறத்தி பெற்றதாக கூறி, மம்தா உண்ணாவிரத பேராட்டத்தை ஆரம்பித்து இன்றோடு 26 நாளாக ஆகி விட்டது. அவரது உடல் நிலை மிகவும் மோசமாகி கொண்டு வருகிறது.இந்நிகழ்வில் குறிப்பிடதக்க அம்சம் என்னவென்றால், நிலமற்ற விவசாயிகளுக்காக போராடி அதானால் தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சிகட்டிலில் அமர்ந்திருக்கும் பொதுவுடைமை கட்சியினர், தொழில்அதிபர்க்கு சாதகமான போக்கினை மேற்கொள்வதும், முதலாளித்துவ சக்திகளுக்கு ஆதரவான பாஜக, திரினாமுல் கட்சிகள், விவசாயிகளுக்காக போராட்டாம் நடத்துவதும் வினோதமாக உள்ளது. மம்தா அவர்களின் உண்ணாவிரத்தை, ஒரு பொருட்டாக கருதாது போல். பொதுவுடைமை கட்சியினர் வெளியில் காட்டிகொண்டாலும், உண்மையில் ரொம்ப பயந்து போய்தான் உள்ளார்கள் என தெரிகிறது. புலிவால் பிடித்த நாயர் கதை போல் ஆயிற்று. பொதுவுடைமை கட்சியினரை ஆட்சிகட்டிலில் இருந்து இறக்க இதை விட சரியான ஆயூதம் வேறு ஏதும் எதிர்கட்சிகளுக்கு கிடைக்காது.காங்கிரஸ் கட்சியினரோ சண்டையில் எந்த பக்கம் வெற்றி கிட்டுமென நரிபோல் யோசித்து கொண்டிருக்கிறார்கள். விவசாயிகள் விருப்பட்டுத்தான் தங்களது நிலத்தை கொடுத்தார்கள் உறுதியாக கூறும் புத்தேவ், ஏன் நிலத்தை திரும்ப பெற்றுகொள்விரும்பும் விவசாயிகள் தங்களது நிலத்தை அவர்கள் விருப்பட்டால் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிக்கை விட்டு அதன்படி நடக்ககூடாது?. இது சரியான தீர்வாக இருக்குமா?

No comments: