Saturday, December 09, 2006

கார்த்திகை

கார்த்திகைக்கு மறுநாள், நான், என் மனைவி , என் மகள் மூவரும் எங்க வீட்டு பால்கனியில் அமர்ந்து பேசி கொண்டு இருந்தோம். அப்பொழுது பக்கத்து வீட்டு பெண் அகல் விளக்கை எடுத்து கொண்டு அந்த பெண் ணின் வீட்டு வாசலுக்கு செல்லுவது போல் இருந்தது , ஆனால் அந்த பெண் அவாகள் வீட்டு கழிப்பறையில் கொண்டு அகலை வைத்து விட்டு கழிப்பறை கதவை முடிவிட்டு தனது வீட்டுக்குள் சென்று விட்டார். என்னடி கழிப்பறையில் கொண்டு தீபத்தை வைக்கிறார்கள் என்றேன். அதற்கு என் மனைவி இது தெரியாதா, சென்னை பக்கம் இப்படிதான் 3ந்தேதி நாம் கொண்டாடியது சிவ கார்த்திகை இன் று விஷ்னு கார்த்திகை அதை மட்டமாக கருத வேண்டுமென்று சைவர்கள்" பீ" கார்த்திகையாக கொண்டாடுவார்கள் என்று சொன்னாள். எங்களுக்கு திருநெல்வேலி சொந்த ஊர், அங்கெல்லாம் இப்படி ஒரு பழக்கம் கிடையாது

No comments: