Thursday, December 28, 2006

இந்திய_அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தத்தால் இந்தியாவிற்கு மின்சார தேவை நிறைவேறும் என்பதில் ஐயமில்லை. ஆனால் அதற்காக நாம் கொடுக்கும் விலை கொஞ்சம் அதிகம்தான்.
1. இனி நாம் அணுபரிசோதனை செய்யவியலாது. பாக் கும் சினாவும் மேற்படி சோதனையில் முனனேறிவிடுவார்கள். நாம் பின்தங்க நேரிடும். நாட்டின் பாதுகாப்பு கேலிகுறி ஆகிவிடும்.
2. அமெரிக்கா சட்டத்தின் படி நடக்கவிட்டால் அணுஉலைக்கான ஈடுபொருள் வழங்குவது நிறத்தப்படும்.மேலும் சேமித்து வைத்து ஈடுபொருளையும் திரும்ப கொடுத்துவிடவேண்டும்.
3. செறிவூட்டபட்ட யூரேனியத்தை விற்ககூடாது.
4. 50 சதவிகித அணு உலைகள் உலக நாட்டின் பரிசோதனை வலையத்துக்குள் வந்துவிடும்
5. அமெரிக்கா ஜனாதிபதியும் இந்திய பிரதமரும் நாட்டின் நலம் பாதுகாப்பு ஆகியவற்றிக்கு பாதாகமாக இவ்ஒப்பந்தமிருக்காது என்று கூறுகிறார்கள் . அமெரிக்காவை எந்தளவு நம்பலாம் என்று தெரியவில்லை.
6. இந்திய நாடாளுமன்றத்திலும் மேற்படி ஒப்பந்தத்துக்கு வாக்கெடுப்பு ஏன் நடத்தகூடாது.
7. ஹிலியத்தை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் சோதனையில் இந்தியாவை பங்காளியாக ஆக்குவதற்கு அமெரிக்கா ஒத்துக்கொள்ளாது சரியானதாக தெரியவில்லை.
8. இப்பொழுது உள்ள நிலையில் நாம் தொடர்ந்து இருப்பது நாட்டின் பாதுகாப்புக்கு ஏற்றது என இந்திய அணுவிஞ்ஞானிகள் கூறுவதுக்கு பிரதமர் தெளிவான விளக்கம் அளிக்கவியலாதது. பெருத்த ஏமாற்றம் அளிக்கிறது.
9. நிறைய விவரங்கள் மறைக்கப்படுவதாக பெருத்த சந்தேகம் படித்தவர்கள் மத்தியிலேயே உள்ளது.
10. பத்திரிக்கையாளாகளோ, எதிர்கட்சிகளோ ஏதாவது ஒரு பக்க வாதத்தை மட்டுமே முன்வைக்கிறார்களோ ஒழிய முழுபக்க தோற்றத்தை யாரும் கொடுக்கவில்லை.
11. முதலில் தாட்டுபுட்டு என்று கத்திய கம்யூனிஸ்டுகள் கூட மம்தா உண்ணாவிரத்தை சமாளிக்கவியலாது அதிலேயே முழ்கிவிட்டார்கள்.
12. படிக்காத மக்களுக்கு இவ் ஒப்பந்தத்தின் முக்கியத்துவம் அரசியல் கட்சிகளால் தெரியப்படுத்தபடவில்லை என்பது வேதனையான விசயமாகும்.
13. அறிவுஜிவிகளும் அடக்கி வாசிக்கிறார்கள்.
14. தனிபெரும்பான்மை இல்லாத காங்கிரஸ் இந்த ஒப்பந்தத்தை கையொப்பமிட்டு நடைமுறைக்கு கொண்டு வந்தால் உண்மையில் அந்த கட்சியின் ராஜதந்திரத்திற்கு கிடைத்த பெரிய வெற்றியாகும்

No comments: