Sunday, November 12, 2006

மாநில கட்சிகளின் அங்கிகாரம்

இந்திய தேர்தல் ஆணையம் புதிதாக ஆரம்பிக்க பட்ட கட்சியினை மாநில கட்சியாக அங்கிகாரம் செய்ய சில நிபந்தனைகளை விதித்துள்ளது. அதன்படி குறிபிட்ட விழுக்காடு ஒட்டுகளும். சட்டமன்றத்தில் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும் உள்ள ஒரு புதிய கட்சியினை தேர்தல்ஆணையம் அங்கிகாரம் அளித்து ஒரு சின்னத்தை அந்த கட்சிக்கு அளிக்கிறது. இவ் நிபந்தனையினை நிறைவேற்ற பாமக , மாதிமுக போன்ற கட்சிகள் பல தேர்தல்களில் முயன்று, மேற்படி நிபந்தனை நிறைவு செய்ய இயலாமல்,கடைசியில் திமுக அல்லது அதிமுக போன்ற பெரிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து மேற்படி நிபந்தனையினை நிறைவு செய்து அங்கிகாரம் பெற்றன. தற்போது, நடிகர் விஜயகாந்த் கட்சி அதிக விழுக்காடு ஓட்டு பெற்றும் , சட்டமன்றத்தில் இரண்டு உறுப்பினர் இல்லாத காரணத்தால் தேர்தல் ஆணையத்தின் அங்கிகாரம் பெறவியலவில்லை.

எனவே, இனி புதிதாக ஆரம்பிக்கபடும் கட்சி, தேர்தல் ஆணையத்தின் அங்கிகாரம் பெற, தனித்து போட்டியிட்டு, மேற்படி
நிப்ந்தனையினை நிறைவு செய்ய வேண்டும் . அதன்பின் கூட்டணி அமைத்து போட்டியிடலாம். அனைத்து கட்சிகளும் இருபது ஆண்டுகளுக்கொரு முறை தனித்துபோட்டியிட்டு மேற்படி நிபந்தனையினை நிறைவு செய்ய வேண்டும். அவ்வாறு நிறைவு செய்யாத கட்சிகளின் அங்கிகாரத்தை நிறுத்தி வைக்க வேண்டும் , சின்னத்தையும் முடக்கிவைக்க வேண்டும் .மேற்படி கட்சி எப்பொழுது நிபந்தனைகளை நிறைவு செய்கிறதோ அப்பொழுது அங்கிகாரத்தையும் அக்கட்சியின் முடக்கப்பட்ட சின்னத்தையும் அக்கட்சிக்கு வழங்கும் வகையில் சட்டதிருத்தம் செய்ய வேண்டும்.. அதுதான் சரியாக இருக்கும்.

No comments: