எச்சரிக்கை!
எனது நண்பர் உறவினர் ஒருவரின் மகளை, அமெரிக்காவில் உள்ள ஒரு சாப்ட்வேர் பொறியாளரான மாப்பிளைக்கு நிச்சயித்து, திருமணம் செய்தார்கள்.அத்திருமணத்தில் என்ன நடந்தது என்பதை உங்களுக்கு சொல்ல விழைகிறேன்.
மாப்பிளையை அழைக்க விமான நிலையம் சென்ற என் நண்பர் மாப்பிளையுடன் ஒரு பெண் வர,அந்த பெண் மாப்பிளையின் நண்பரின் மனைவி மாப்பிளையின் நண்பரின் சார்பாக, திருமணத்துக்கு வந்து உள்ளார்கள் என அறிந்து, மனசு சற்று ஆறுதல் அடைந்தார் எனவும். அப்பெண் மாப்பிளையுடன் ரொம்ப நெருக்கமாய் இருந்தது கொஞ்சம் உறுத்தலாய் இருந்தாலும் அமெரிக்க நாகரிகமாய் இருக்கலாம் என மெளனமாய் இருந்து விட்டார்கள். தம்பதிகள் அமெரிக்கா சென்ற பின்னும் அப்பெண் புதுமாப்பிளையுடன் இழைய புது மணப்பெண் விசாரிக்க, மணமக்களிடையே பெருத்த சண்டையாகி , விவாக ரத்து செய்து புதுமணப்பெண்ணின் விசாவை பிடுங்கி வைத்து கொண்டு, அப்பெண்ணை வீட்டை விட்டு துரத்தி விட்டான். தன் நண்பனின் மனைவியை திருமணம் செய்து கொண்டதாகவும் ,விவரம் அறிந்த பெற்றோர்கள் அமெரிக்க வாழ் உறவினர்களை உடன் தொடர்பு கொண்டு புதுபெண்ணை காப்பாற்றி ஒரு வேலை வாங்கி கொடுத்தார்கள் என்றும், இச்செய்தியால் மனம் உடைந்த மணப்பெண்ணின் தந்தை தற்போது மரணம் அ டைந்து விட்டார் என்றும். மாப்பிளையின் நண்பரும் அமெரிக்கா வேலையை துறந்து இந்திய வந்து சொந்த ஊரில் பைத்தியகாரனாய் அலைவதாகவும் சொன்னார். தந்தையின் இறுதிசடங்கு செய்ய அந்த பெண் தனது தாயை இந்தியாவில் தனியாக விட்டு விட்டு மீண்டும் அமெரிக்கா செல்ல உள்ளதாகவும் தெரிவித்தார்.
சினேக துரோகம், அமெரிக்க மோகம், பண்பாட்டு மாற்றம் இது மூன்றும் சேர்ந்து எத்தனை துன்பத்தை ஏற்படுத்திவிட்டது.
Sunday, November 12, 2006
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment